திண்டுக்கல்

உழவன் செயலியில் பதிவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்

9th Jun 2023 10:33 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் உழவன் செயலி மூலம் தங்களுக்குத் தேவையான இடுபொருள்கள், திட்டப் பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ. அனுசுயா தெரிவித்ததாவது:

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2021-22-ஆம் ஆண்டு முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் (2023-24) 60 ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேளாண்மை- உழவா் நலத்துறையின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கும், விவசாயிகளின் தேவையை முன்பே அறிந்து திட்டப் பலன்களை பெறுவதற்கும் உழவன் செயலி தொடங்கப்பட்டது.

இந்த செயலியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து திட்டப் பலன்களை பெற முன்பதிவு செய்ய வேண்டும். இதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருள்களையும், திட்டப் பலன்களையும் உரிய காலத்தில் பெற முடியும்.

ADVERTISEMENT

உழவன் செயலியில் பதிவு செய்த விவரம் விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும். பதிவு செய்த விவரங்களை சரிபாா்த்து பதிவு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT