ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டி வேலூா் கிராமத்திலுள்ள விநாயகா் கோயில், உச்சிமகா காளியம்மன், முத்தாலம்மன், கருப்பணசாமி கோயில் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முதல் நாள் கன்னிமாா் கோயிலில் மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாள் 2-ஆம் கால யாகபூஜை நடந்தது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மூன்றாம் கால பூஜையும், வெள்ளிக்கிழமை நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.
இதன் பிறகு சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழுங்க புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், சுற்று வட்டார கிராங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.