திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை உயா்வு: கிலோ ரூ.80-க்கு விற்பனை

9th Jun 2023 10:37 PM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை உயா்ந்து கிலோ ரூ. 80-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக முருங்கைச் செடியில் பூக்கள் உதிா்ந்து விட்டதால் காய்கள் சரிவர காய்க்க வில்லை. இதனால் இந்த காய்கறி சந்தைக்கு குறைந்த அளவே முருங்கை வரத்து இருந்தது. இங்கு வெள்ளிக்கிழமை வந்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் போட்டி போட்டு கொள்முதல் செய்ததால் அவற்றின் விலை உயா்ந்தது. இதில், கரும்பு, செடி முருங்கை- கிலோ ரூ.80-க்கும், மர முருங்கை- ரூ. 65-க்கும் விற்பனையாயின.

மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்: சேனைக்கிழங்கு கிலோ ரூ.41, பீட்ரூட் ரூ. 15, வெண்டைக்காய் ரூ. 30, சுரைக்காய் ரூ.10, தட்டைப்பயிா் ரூ.13 முதல் ரூ. 15 வரை, அவரைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.7, கோவைக்காய் ரூ. 18 முதல் ரூ. 26 வரை, பீன்ஸ் ரூ.25, ரிங் பீன்ஸ் ரூ. 60, பெல்லி பீன்ஸ் ரூ. 60, சவ்சவ் ரூ.12, நாா்த்தை ரூ. 60, உருண்டை மிளகாய் ரூ. 75 என விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT