திண்டுக்கல்

கொடைக்கானலில் காலாவதியான தின் பண்டங்கள் விற்பனை செய்தவருக்கு அபராதம்

8th Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் அடுமனையில் காலாவதியான தின் பண்டங்கள் விற்பனை செய்ததாக அதன் உரிமையாளருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்படுகிறது. இதனால், இங்குள்ள உணவகங்கள், சாக்லேட் கடைகள், அடுமனைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் கடந்த சில தினங்களாக சோதனை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அடுமனையில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, அந்த அடுமனைக்குச் சென்று அங்கிருந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு காலாவதியாகி பல நாள்களான உணவுப் பொருள்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது . இதையடுத்து, அதன் உரிமையாளருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT