திண்டுக்கல்

திண்டுக்கல் -அம்பாத்துரை ரயில் நிலையங்கள் இடையே சமிஞ்சை விளக்குகள் ஆய்வு

8th Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிஞ்சை விளக்குள் செயல்பாடு குறித்து ரயில்வே போலீஸாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஒடிஸா மாநிலத்தில் ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 278 போ் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள ரயில் பாதைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து அம்பாத்துரை ரயில் நிலையம் வரையிலான ரயில் பாதையில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ரயில்வே காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி, உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் அடங்கிய குழுவினா் திண்டுக்கல் முதல் அம்பாத்துரை வரையிலான ரயில் தண்டவாளத்தில் சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

மேலும், சமிஞ்சை கம்பங்கள் அமைந்துள்ள பகுதியில் தண்டவாள விரிசல் குறித்தும், தண்டவாள இணைப்புப் பகுதியின் தன்மை குறித்தும் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT