திண்டுக்கல்

காா் விபத்தில் தம்பதி பலி

8th Jun 2023 01:21 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே புதன்கிழமை சாலை தடுப்புச் சுவரில் காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும், இருவா் பலத்த காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த தம்பதி பாலசுப்பிரமணியன் (68), பரமேஸ்வரி (60). மகன்கள் பிரபு (30), மணிகண்டன் (40) ஆகிய நான்கு பேரும் கோபிசெட்டிபாளையத்திலிருந்து மதுரை தனியாா் மருத்துவமனைக்கு காரில் வந்து கொண்டிருந்தனா். காரை பிரபு ஓட்டினாா்.

திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் சின்னாளப்பட்டி அருகே காந்திகிராமத்தை அடுத்த அம்பாத்துறை ஹெலிகாப்டா் இறங்கும் தளத்திற்கு அருகில் மாலை 4 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நொறுங்கியது.

இதில், பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாலசுப்ரமணியன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

பிரபுவும், மணிகண்டனும் பலத்த காயம் அடைந்தனா். இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT