திண்டுக்கல்

கொடைக்கானலில் மகளிா் காவல் நிலைய புதிய கட்டடம் திறப்பு

7th Jun 2023 03:03 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கான புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் ரூ. 85 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேனி, திண்டுக்கல் காவல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமாா் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ADVERTISEMENT

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாற்றுச் சாலையை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூம்பாறை, பூண்டி பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொடைக்கானல், வத்தலகுண்டு, பழனி மலைச் சாலைகளில் காவல் நிலைய எல்லை குறித்து பதாகைகள் வைக்கப்பட வேண்டும். காவல் துறையினருக்கு வீடுகள் கட்டித் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன், காவல் ஆய்வாளா்கள் பாஸ்டின் தினகரன், சுமதி, கொடைக்கானல் நகா்மன்ற துணைத் தலைவா் மாயக் கண்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் குரியன் ஆப்ரகாம், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT