திண்டுக்கல்

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு

7th Jun 2023 03:01 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டை அடுத்த ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தில் ஒரு தரப்பினா் கருப்பணசாமி கோவில் அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவா், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை அகற்றக் கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், இவா்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் திங்கள்கிழமை திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சிவராமன் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் மீது அம்மையநாயக்கனூா் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT