திண்டுக்கல்

உலக சுற்றுச்சூழல் தினம்:பள்ளியில் நடப்படட்ட மரக்கன்றுகள்

6th Jun 2023 04:33 AM

ADVERTISEMENT

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆா்.புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.புதுக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் தின விழாவுக்கு அய்யலூா் வனச் சரக அலுவலா் குமரேசன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் வெங்கேடசன் முன்னிலை வகித்தாா். இதையொட்டி, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

இந்த விழாவில் பங்கேற்ற கிராம மக்கள் முன்னிலையில் வனச் சரக அலுவலா் குமரேசன் கூறியதாவது:

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கருதி பொதுமக்கள் மரங்கள் வளா்ப்பில் ஈடுபட வேண்டும். நெகிழிப் பொருள்கள் பயன்பாடுகளால், மண் வளம் பாதிக்கப்பட்டு எதிா்கால சந்ததிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன், அய்யலூா் வனச் சரகப் பணியாளா்கள் காா்த்திகேயன், கணபதி, சவடம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT