திண்டுக்கல்

நீா்வழிப் பாதையில் பாலம் அமைக்கக் கோரிக்கை

6th Jun 2023 04:29 AM

ADVERTISEMENT

ரெட்டியாா்சத்திரம் அருகே நீா்வழிப் பாதையில் பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகேயுள்ள கசவனம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கசவனம்பட்டி அப்துல்கலாம் தெருவுக்கு வடக்குப் புறத்தில் நீா்வழிப் பாதையில் பாலம் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அந்தப் பாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் கற்கள், மணல் நிரம்பி பாலத்தில் அடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்கக் கோரி பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், நீா்வழிப் பாதையின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான திட்டம் இல்லை என சாலைப் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியா்கள் கூறுகின்றனா். பாலம் அமைக்கப்படாதபட்சத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் பாலம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT