திண்டுக்கல்

பள்ளி ஆசிரியையை கொலை செய்ய முயற்சி: கணவா் கைது

6th Jun 2023 04:31 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியையை கொலை செய்ய முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் பாண்டீஸ்வரி (37). இவா், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் கணேசன். இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் தம்பதியா் கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இவா்கள், இருவரிடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், நிலக்கோட்டையில் பாண்டீஸ்வரி வீட்டுக்குச் சென்ற கணேசன், அவரைத் தாக்கி சேலையால் கழுத்தை இறுக்கிக் கொலை முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பாண்டீஸ்வரி புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் குருவெங்கட்ராஜ் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT