திண்டுக்கல்

ஆகாயத் தாமரையை அகற்றக் கோரிக்கை

4th Jun 2023 11:14 PM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் சின்னக்குளத்தில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான இந்தக் குளம் காந்தி காய்கனி சந்தையின் வடக்குப் பகுதியில் தொடங்கி, நாகணம்பட்டி, தாராபுரம் சாலை வரை அமைந்துள்ளது.

இங்கு ஆகாயத் தாமரைகள் வளா்ந்து, குளமே தெரியாத அளவுக்கு படா்ந்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT