திண்டுக்கல்

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு

4th Jun 2023 11:14 PM

ADVERTISEMENT

பழனி வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் முத்துக்குமார சுவாமி தம்பதி சமேதராக தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி மயில், வெள்ளி ஆட்டுக்கிடா, தந்தச் சப்பரம், தங்கக் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி ரத வீதி உலா வந்தாா்.

கடந்த வியாழக்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளிக்கிழமை தேரோட்டமும் நடைபெற்றன.

திங்கள்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக, காலையில் சுவாமி ஊடல் நிகழ்ச்சியும், இரவு திருக்கொடி இறக்கமும் நடத்தப்பட்டு, விழா நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT