திண்டுக்கல்

கொடைரோடு பகுதியில் மழை

4th Jun 2023 11:12 PM

ADVERTISEMENT

கொடைரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு, அம்மையநாயக்கனூா், பள்ளப்பட்டி, சிலுக்குவாா்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சனிக்கிழமை சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததாலும் மின் கம்பங்கள் பழுது காரணமாகவும் மின் தடை ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT