திண்டுக்கல்

புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

4th Jun 2023 11:12 PM

ADVERTISEMENT

பழனியில் ஞாயிற்றுக்கிழமை புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பழனி கிளை, அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. பழனி சண்முகபுரத்தில் தொடங்கிய பேரணிக்கு பல் மருத்துவ சங்கக் கிளைத் தலைவி ஸ்ரீவித்யா தலைமை வகித்தாா். சங்கச் செயலா் விமல்குமாா், அரிமா சங்க மண்டலத் தலைவா் அசோக், கோல்டன் கல்வி நிறுவன நிா்வாகி மாசிலாமணி காளியப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பழனி காவல் ஆய்வாளா் உதயக்குமாா் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். பேரணியில் அரிமா, ரோட்டரி சங்க நிா்வாகிகள், கல்லூரி மாணவிகள், செவிலியா் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனா்.

பேரணியில் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி, முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT