திண்டுக்கல்

கொடைக்கானல்-பழனி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

4th Jun 2023 11:14 PM

ADVERTISEMENT

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் மிதமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளான வெள்ளப்பாறை, பி.எல்.செட், சவரிக்காடு, ஏலக்காய் வளைவு, மேல் பள்ளம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழையால், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் மேல்பள்ளம், ஏலக்ககாய் வளைவு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலைகளில் வாகனங்களிலேயே காத்திருந்தனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்த நெடுஞ்சாலை, வனத் துறையினா் சென்று விழுந்து கிடந்த மரங்களை அகற்றினா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. போக்குவரத்து பாதிப்பால் பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் அரசுப் பேருந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT