திண்டுக்கல்

கொடைக்கானலில் வாகன நெரிசல்

4th Jun 2023 11:13 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கோடை விழா முடிந்த பிறகும் தொடா்ந்து விடுமுறை நாள்களாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. மோயா் பாயிண்ட், வெள்ளி நீா் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், குணா குகை, கோக்ா்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனா்.

சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வந்ததால் செவண் சாலை, ஏரிச் சாலை, லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல், கலையரங்கம் பகுதி, அண்ணா சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கின.

கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் குளுமையான சீதோஷ்ணமும் நிலவுகிறது.

ADVERTISEMENT

ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரியும் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.

மழை: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் மிதமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில், ஞாயிறு பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கி, 3. 30 மணி வரை மழை பெய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT