திண்டுக்கல்

செந்துறை அருகே கோயில் கும்பாபிஷேகம்

3rd Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி தேவதானுஞ்சை, வாஸ்து ஸாந்தி, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, பூா்ணாகுதி, முதல் கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பிறகு லட்சுமி பூஜை, கோ பூஜை, சதுரித்வார பூஜை, 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித தீா்த்தக் குடங்கள் ஊா்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT