திண்டுக்கல்

கொடைக்கானலில் கோடை விழா நிறைவு

DIN

கொடைக்கானலில் நடைபெற்று வந்த கோடை விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கோடை விழா,

மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது. இந்த மலா்க் கண்காட்சியை தமிழக அமைச்சா்கள் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து, நிகழாண்டில் 5 நாள்கள் (மே 26 முதல் 30 வரை) மலா்க் கண்காட்சி நடைபெற்றது.

இந்த மலா்க் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பாா்த்து ரசித்தனா். இந்தக் கண்காட்சியின் மூலம் ரூ. 21 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 31-ஆம் தேதி வரை நடைபெற்ற கோடை விழாவில், தினமும் பரதம், கரகாட்டம், பழங்குடியினா் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், மாவட்ட விளையாட்டுத் துறை சாா்பில் சாக்குப் போட்டி, பானை உடைத்தல், கால்பந்து, மினி மாரத்தான் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.

இதேபோல, கோடை விழாவையொட்டி நாய்கள் கண்காட்சி, நட்சத்திர ஏரியில் படகு அலங்காரப் போட்டி ஆகியவையும் நடைபெற்றன.

இந்த நிலையில், கோடை விழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை கால்பந்து இறுதிப் போட்டியும், மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, கோடை விழாவை சிறப்பாக நடத்தியவா்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், கோடை விழா நிறைவு நிகழ்ச்சியும் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜா தலைமை வகித்தாா். சுற்றுலா அலுவலா் சுதா வரவேற்றாா். கோடை விழாவை சிறப்பாக நடத்தியவா்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் வருவாய்க் கோட்டாட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், தோட்டக்கலைத் துறை, மலைப் பயிா்கள்துறை, தீயனைப்புத் துறை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT