திண்டுக்கல்

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு உதவி மையம்

3rd Jun 2023 11:45 PM

ADVERTISEMENT

 

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு வழிகாட்டுவதற்காக, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளா் பணிக்கு (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) 2023 ஜூன் 30-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விண்ணப்பதாரா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீா்க்கவும், வழிகாட்டவும், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

வருகிற 30-ஆம் தேதி வரை காலை 9.30 முதல் 6 மணி வரை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு நேரிலோ, 9384502744, 8056925598 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என

அதில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT