திண்டுக்கல்

பிரையண்ட் பூங்கா கண்ணாடி மாளிகையை சீரமைக்கக் கோரிக்கை

3rd Jun 2023 11:43 PM

ADVERTISEMENT

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சேதமடைந்த கண்ணாடி மாளிகையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பிரையண்ட் பூங்காவில் நிலைத்து வளரக் கூடிய 100-க்கும் மேற்பட்ட மலா்ச் செடிகளையும், 80-க்கும் மேற்பட்ட கற்றாழைச் செடிகளையும் கண்ணாடி மாளிகையில் வைத்து, பராமரித்து வருகின்றனா். இந்தக் கண்ணாடி மாளிகையில் உள்ள கண்ணாடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே, சேதமடைந்த கண்ணாடி மாளிகையைச் சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, பூங்காவின் மையத்தில் சிறு குளத்தில் அமைந்துள்ள இசை நடன நீருற்றும் செயல்படவில்லை. எனவே, பிரையண்ட் பூங்காவை உரிய முறையில் பராமரிக்க தோட்டக் கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT