திண்டுக்கல்

ஆவிச்சப்பட்டியில் புரவி எடுப்பு விழா

3rd Jun 2023 11:43 PM

ADVERTISEMENT

 

நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலில் சனிக்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

கடந்த மாதம் 19- ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்குப் பின்னா், பெரிய மந்தையிலிருந்து அய்யனாா் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கொடிவடம் போடுதல், எருது கட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT