திண்டுக்கல்

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: இன்று திருக்கல்யாணம்

DIN

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வியாழக்கிழமை வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜூன் 1) திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.

பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழாவும் ஒன்றாகும். இந்தத் திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை வாகனங்களில் நான்கு ரத வீதி உலா எழுந்தருளினாா்.

வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டமும் நடைபெறுகின்றன.

விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT