திண்டுக்கல்

பழனி கோயில் புதிய இணை ஆணையா் பொறுப்பேற்பு

1st Jun 2023 11:01 PM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தலைமை அலுவலகத்தில் புதிய இணை ஆணையராக பிரகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலாகவும், வருவாயில் முதலிடம் வகிக்கும் கோயிலாகவும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயிலின் இணை ஆணையா், நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றிய நடராஜன் புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின் பேரில், பழனி கோயில் துணை ஆணையராக பணியாற்றி வரும் பிரகாஷ், கோயில் இணை ஆணையராக முழுக் கூடுதல் பொறுப்பேற்றாா். அவருக்கு கோயில் அலுவலா்கள், முக்கிய பிரமுகா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT