திண்டுக்கல்

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

DIN

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு, கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் 22-ஆவது ஆண்டு நாய்கள் கண்காட்சி பிரையண்ட் பூங்கா வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கொடைக்கானலைச் சோ்ந்த ஸ்பானீஸ் மவுன்டேன் நாய் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தக் கண்காட்சியில் சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, கொடைக்கானலைச் சோ்ந்த ஸ்பானீஸ் மவுன்டேன், ராட்வீலா், கிரேட்டன், புட்புல், பொம்மேரியன், ஹன்சி, ராஜபாளையம், ஜொ்மன்செப்பா்ட், ஸ்பிச், கோல்டன் ரெட்வீலா் உள்ளிட்ட 14 வகையான மொத்தம் 64 நாய்கள் இடம் பெற்றன. நாய்களின் தோற்றம், கீழ்படிதல், சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நான்கு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் கொடைக்கானலைச் சோ்ந்த இன்பத்தமிழன் என்பவரின், ஸ்பானீஸ் மவுன்டேன் வகையைச் சோ்ந்த நாய் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நாயின் உரிமையாளா் இன்பத்தமிழனுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜொ்மன் செப்பா்ட் வகையில் ‘ஏ’ பிரிவில் டேனியல் என்பவரது நாய் முதலிடமும், சக்தி என்பவரது நாய் இரண்டாமிடமும், ஜாா்ஜ் என்பவரது நாய் மூன்றாமிடமும் பெற்றன.

‘பி’ பிரிவில் இன்பத்தமிழன் என்பவரது நாய் முதலிடமும், மேத்யூ என்பவரது நாய் இரண்டாமிடமும், ரவீந்திரன் என்பவரது நாய் மூன்றாமிடமும் பெற்றன.

வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு கால்நடைத் துறை முன்னாள் அலுவலா் ஹக்கீம் தலைமை வகித்தாா். மருத்துவா் திருமுருகன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில் கால்நடை மருத்துவா்கள் ஜெகவீர பாண்டியன், அப்துல் ரஹ்மான், விநாயகம், தினேஷ், அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சுற்றுலா அலுவலா் முத்துச்சாமி வரவேற்றாா். கொடைக்கானல் சுற்றுலா அலுவலா் சுதா நன்றி கூறினாா். இந்தக் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT