திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே, கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்

12th Jul 2023 04:17 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை அருகே, கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் காணவில்லை. அவா்களை, காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்த, ராதாகிருஷ்ணன் மகள் துா்காதேவி (19) இவா், நிலக்கோட்டை அரசு மகளிா் கலை கல்லூரியில், பி.,காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 10 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை என, கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை விளாம்பட்டி அருகே உள்ள தோட்டத்தில், பூ பறித்து விட்டு, வருவதாக சென்றவா், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை ராதாகிருஷ்ணன், விளாம்பட்டி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளா் பரமேஸ்வரனிடம் புகாா் கொடுத்தாா். இந்த புகாா் பேரில், திங்கள்கிழமை இரவு, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோன்று நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியைச் சோ்ந்த பெயிண்டா் முத்துக்குமாா் (35) என்பவரது மனைவி பாண்டிசெல்வி (32) இவருக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்த பாண்டிச்செல்வியை கிடைக்கவில்லை என, நிலக்கோட்டை காவல் ஆய்வாளா் குரு வெங்கட்ராஜிடம், முத்துக்குமாா் கொடுத்த புகாரின்பேரில், திங்கள்கிழமை இரவு வழக்கு பதிவு செய்து, பாண்டிச்செல்வியை தேடி வருகின்றனா். காணாமல் போன பெண்கள், கடத்தபட்டாா்களா? அல்லது காதலனுடன் ஓடி விட்டாா்கள்? என்ற கோணத்தை காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நிலக்கோட்டை பகுதியில் 2 பெண்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT