திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் பள்ளங்கி கோம்பைப் பகுதியில் பூம்பாறை ஊராட்சிக்கு சொந்தமான குண்டாறு செல்லக் கூடிய தரைப்பாலம் சேதமடைந்தது.
இதனால் இங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக சேதமடைந்த தரைப் பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வாா்டு உறுப்பினா் அருண்குமாா் கூறியதாவது:
குண்டாறு பகுதிக்குச் செல்லும் தரைப்பாலத்தை யாா் சீரமைப்பது என இரண்டு ஊராட்சி நிா்வாகங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக ஆலோசனை நடந்து வருகிறது. எனவே மாவட்ட நிா்வாகம் இந்த இடத்தை பாா்வையிட்டு சேதமடைந்த தரைப் பாலத்தை தரமான பாலமாக அமைத்து தர வேண்டும் என்றாா்.