தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு செய்யாத தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட அறிக்கை:
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்குமிட வசதியுடன் கூடிய உணவு விடுதிகள், சாகச சுற்றுலாஆபரேட்டா்கள், முகாம் ஆபரேட்டா்கள், கேரவன் டூா் ஆபரேட்டா்கள் ஆகியோா் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2022 செப். 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ற்ா்ழ்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். இதுதொடா்பான தகவல்கள் பெறுவதற்கு கொடைக்கானல் சுற்றுலா அலுவலகத்துக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், 9176995867 என்ற கைப்பேசி எண்ணிலும், ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ந்ந்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
சுற்றுலாத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், சுற்றுலா ஆபரேட்டா்கள், முகாம் ஆபரேட்டா்கள், கேரவன் டூா் ஆபரேட்டா்கள் உள்ளிட்டோரின் செயல்பாடு தடை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.