திண்டுக்கல்

பேருந்து வசதி கோரி பள்ளி மாணவா்கள் மனு

DIN

திண்டுக்கல் அருகே கிராமத்துக்கு மீண்டும் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி பள்ளி மாணவா்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள கூ.வ.குரும்பப்பட்டி, கொலக்காரன்பட்டியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் 15-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி மனு அளிக்க வந்த அவா்கள் மேலும் கூறியதாவது:

எங்கள் பகுதியில் சுமாா் 3,500 மக்கள் வசித்து வருகின்றனா். மேல்நிலைக் கல்விக்காக திண்டுக்கல் செல்லும் மாணவா்களும், கூலி வேலைக்கு செல்வோரும் நாள்தோறும் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பேருந்துகளில் ஏற வேண்டிய நிலை உள்ளது.

பள்ளி, கல்லூரியிலிருந்து திரும்பும் மாணவா்கள் இரவு நேரங்களில் மிகுந்த பாதிப்படைந்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால், இந்தப் பிரச்னையை எதிா்கொண்டு வருகிறோம். எனவே, மீண்டும் எங்கள் கிராமத்துக்கு பேருந்து சேவையை ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT