திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருநாள்: பக்தா்கள் கூட்டம்

DIN

பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலைக்கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப்காா் போன்ற இடங்களில் டிக்கெட் பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை முடிந்த பிறகு சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் உலா எழுந்தருளினாா். பின்னா், தங்கத்தேரில் வெளிப்பிரகாரம் உலா எழுந்தருளினாா். தங்கத்தோ் புறப்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தைப் பூசத்தை முன்னிட்டு வருகிற பிப்.2 முதல் பிப். 6-ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT