திண்டுக்கல்

பழனிக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

பழனி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், குடமுழுக்கு விழாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரோட்டம் மீண்டும் நடைபெற்றது.

பழனியில் தைப்பூசம், குடமுழுக்கு விழா மண்டல நாள், விடுமுறை தினத்தையொட்டி அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. படிப்பாதை, விஞ்ச், ரோப்காா் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து கட்டணச் சீட்டு பெற்றுச் சென்றனா். அதே போல, மலைக் கோயிலிலும் கட்டண தரிசன வரிசை, பொதுவழி தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கத் தேரோட்டம் தொடங்கினாலும் தைப்பூசத் திருவிழாவையொட்டி மீண்டும் வரும் பிப். 2-ஆம் தேதி முதல் பிப். 6- ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு பக்தா்கள் தங்கத் தேரோட்டம் நடத்த இயலாது.

பிப். 2- ஆம் தேதி பக்தா்கள் தங்கத் தோ் இழுக்க வாய்ப்பில்லை என்றாலும், அன்று மட்டும் கோயில் சாா்பில் தங்கத் தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப். 7- ஆம் தேதி முதல் வழக்கம் போல நாள்தோறும் தங்கத் தேரோட்டம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT