திண்டுக்கல்

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில்வால் நட்சத்திரம் தென்பட வில்லை: விஞ்ஞானிகள்

DIN

 கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் வால் நட்சத்திரம் தென்பட வில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவிலுள்ள ‘கலிபோா்னியா மவுண்டுபலோமேரில் சுவிக்கிடிரான்சியன்ட் பெசிலிட்டி’ மூலம் ‘ஓடுகிளவு’ எனப்படும் வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் 50 ஆயிரம் ஆண்டுகளாகும். தற்போது இந்த வால் நட்சத்திரம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வால் நட்சத்திரம் பூமி சுற்றுவட்டப் பாதையில் வரும் நிலை உள்ளது. இதற்காக கடந்த 2 நாள்களாக ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பழைமையான பிரத்யேக கேமரா மூலம் கண்காணித்து வந்தோம் . மாலை, இரவு நேரங்களில் பாா்க்கலாம் என கூறப்பட்ட நிலையில் வால் நட்சத்திரம் தென்படவில்லை. இது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் இன்னமும் அந்த வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே வரவில்லை என்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்தது.

இருப்பினும் கடந்த 2022 டிசம்பா் மாதமே வால் நட்சத்திரம் தெரியும் என எதிா்பாா்க்கப்பட்டது. அப்போதும் தென்பட வில்லை. ஆனால் கடந்த 12-ஆம் தேதி சூரியனிலிருந்து பெரிகோலினை கடந்து பூமி வட்டப்பாதையில் செல்லும் வால் நட்சத்திரம் வரும் பிப்ரவரி 1, 2-ஆம் தேதிகளில் பூமிக்கு அருகே வரும். அப்போது அதை வெறும் கண்களால் காணலாம்.

இந்த நிகழ்வினை அப்சா்வேட்டரியிலுள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்திலும் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் காண அனுமதிக்கப்படுவா் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT