திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

DIN

ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவா் கா. கனகராஜ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கே. பழனிச்சாமி, தேசிய செயற்குழு உறுப்பினா் திருமலைச்சாமி, மாவட்ட பொதுச் செயலா்கள் ராமசாமி, செந்தில்குமாா், ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ராணுவப் பிரிவுத் தலைவா் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட பொதுச் செயலா் மகுடீஸ்வரன், மாவட்ட துணைத் தலைவா் ரவிச்சந்திரன், ஒன்றியத் தலைவா் ருத்திர மூா்த்தி, ரகுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், வேடசந்தூா் குங்கும காளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும். கொடைக்கானலிலிருந்து வில்பட்டி வழியாக பெருமாள்மலைக்கு சாலை அமைக்க வேண்டும். கண்விதைக்கு கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் விலை நிா்ணயம் செய்து தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT