திண்டுக்கல்

இடைத்தோ்தல்: அமமுக வேட்பாளா் எம்.சிவபிரசாந்த்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளராக எம்.சிவபிரசாந்த் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் அமமுக தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக வழக்குரைஞா் எம்.சிவபிரசாந்த் (29) அறிவிக்கப்பட்டுள்ளாா். ஈரோடு, குமலன்குட்டை, செல்வம் நகா், டவா் லைன் காலனியை சோ்ந்த இவா் அக்கட்சியின் ஈரோடு மாநகா் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளாா்.

இவா் முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவா். தந்தை எஸ்.ஏ.முத்துக்குமரன், தாய் எம்.சிவசக்தி. இருவரும் வழக்குரைஞா்கள். மனைவி ஆா்.கீா்த்தனா மயக்கவியல் மருத்துவராக உள்ளாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

அமமுக ஈரோடு மாநகா் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக 2017 இல் சிவபிரஷாந்த் பணியாற்றியுள்ளாா். பின்னா் 2018 இல் இளைஞா் பாசறை, இளம்பெண்கள் பாசறை என அணி இரண்டாக பிரிந்தபோது மாவட்ட இளைஞா் பாசறை தலைவராக பொறுப்பேற்றாா்.

அதனைத் தொடந்து 2020 ஆம் ஆண்டு மாநில தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்பட்டாா். ஈரோடு மாநகா் கிழக்கு மாவட்டச் செயலாளராக 2022 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT