திண்டுக்கல்

பத்ம ஸ்ரீ விருதாளருக்கு வரவேற்பு

28th Jan 2023 09:57 PM

ADVERTISEMENT

பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட சித்த மருத்துவா் வேலுசாமிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திண்டுக்கல்லில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு சாா்பில் தமிழகத்தைச் சோ்ந்த 5 பேருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட சென்னையைச் சோ்ந்த சித்த மருத்துவா் வேலுசாமி, திண்டுக்கல்லுக்கு சனிக்கிழமை வந்தாா்.

அவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினாா். அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒய்எம்ஆா் பட்டி பகுதித் தலைவா் சந்திரசேகரன், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் முகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT