திண்டுக்கல்

மகளிா் முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணா்வு பேரணி

28th Jan 2023 09:59 PM

ADVERTISEMENT

மகளிா் முன்னேற்றங்கள், பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

புதிய சமூக நெறியை நோக்கி என்ற பெயரில் திண்டுக்கல் தானம் அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியில் பங்கேற்ற சுய உதவிக் குழுவினா், சிறு திறன் மையங்கள், சுகம் வட்டாரங்கள், வாக்கத்தான் 2023, மகளிா் முன்னேற்றம், மகளிா் விழிப்புணா்வு, மகளிா் பாதுகாப்பு சட்டங்கள், மளிருக்கான முன்னேற்றத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

பேரணியில் தானம் அறக்கட்டளையின் திட்டத் தலைவா் த.ஐயப்பன், காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியா் எல்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT