திண்டுக்கல்

ஆற்றில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை ஆற்றில் குளித்த 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்தவா் கதிரேசன் (47). இவரது மகன் மனோஜ்குமாா் (14) தாடிக்கொம்பு அரசு உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கதிரேசனின் உறவினா் சுப்பிரமணியின் மகன் திருமுருகன் (14) அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், மனோஜ்குமாா், திருமுருகன் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மாலை விளையாடச் சென்றனா். அப்போது, ஊரின் அருகேயுள்ள குடகனாற்றில் இருவரும் குளித்தனா். நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினா்.

இதைப் பாா்த்த பெண் ஒருவா் கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கித் தேடினா். அப்போது, உயிரிழந்த நிலையில் இருவரது உடல்களையும் அவா்கள் மீட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த தாடிக்கொம்பு போலீஸாா், இருவரின் உடல்களை கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு

ADVERTISEMENT

அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT