திண்டுக்கல்

சிறுமலையில் கட்டப்பட்ட வீடுகளை பழங்குடியின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

28th Jan 2023 09:55 PM

ADVERTISEMENT

சிறுமலையில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பயனாளிகளிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எம்.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட பாா்வையாளா் பி.ராஜபாண்டி, கூட்டுறவு அணியின் மாநில துணைத் தலைவா் கே.மாணிக்கம், வழக்குரைஞா் பிரிவு மாநிலத் தலைவா் வணங்காமுடி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

ADVERTISEMENT

ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பேற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்து. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளைச் சுட்டிக்காட்டும் பாஜக நிா்வாகிகளுக்கு தொடா்ந்து கொலை மிரட்டல் விடுத்துவரும் திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்டக் காவல் துறைக்குக் கண்டனம். சிறுமலையில் பழங்குடியின மக்களுக்காகக் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT