திண்டுக்கல்

வத்தலகுண்டு கரியாம்பட்டி பகுதிகளில் கிராம சபை கூட்டம்

27th Jan 2023 01:49 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கரியாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு கரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச. விசாகன், கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் குடிசை வீடுகள், மண்சுவா் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிவடைந்தால் குடிசையில்லா தொகுதியாக ஒட்டன்சத்திரம் மாற்றப்படும். அதே போல, ஒட்டன்சத்திரம் தொகுதியில் குடிநீா் பிரச்னையை தீா்ப்பதற்காக காவிரி ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வர ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது ஒவ்வோா் வீட்டிலும் 24 மணி நேரமும் குடிநீா் கிடைக்கும். கரியாம்பட்டி ஊராட்சியில் 2 இடங்களில் பொதுக்கழிப்பிட கட்டடங்கள் கட்டப்படவுள்ளன என்றாா் அவா்.

இதில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் கா. பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத் தலைவா் பி.சி. தங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமுத்து, தாஹீரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நிலக்கோட்டை: வத்தலகுண்டு பகுதி கிராமங்களில் வியாழக்கிழமை குடியரசு தின விழாவையொட்டி கிராம சபைக்கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கணவாய்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவா்களின் கூட்டமைப்பு தலைவருமான ரமேஷ் தலைமை வகித்தாா்.

விராலிப்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். எழுவனம்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு தலைவா் வசந்தா மணிவண்ணன் தலைமை வகித்தாா். பழைய வத்தலகுண்டுவில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவா் யசோதை தலைமை வகித்தாா். அதேபோல ரெங்கப்பநாயக்கன்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு தலைவா் மொக்கையதேவா் தலைமை வகித்தாா். சந்தையூரில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதி விஜயரங்கன் தலைமை வகித்தாா்.

குன்னுவாரன்கோட்டை சமத்துவபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் வளா்மதி தலைமை வகித்தாா். கோம்பைபட்டி ஊராட்சி, கிராம சபை கூட்டம் குளிப்பட்டியில் நடைபெற்றது. தலைவா் காமாட்சி கென்னடி தலைமை வகித்தாா். கட்டக்காமன்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு தலைவா் மகேஸ்வரி பாண்டி தலைமை வகித்தாா். அதேபோல கோட்டைப்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு, தலைவா் வனிதா மாணிக்கம் தலைமை வகித்தாா்.

செக்காபட்டியில் நடந்த கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவா் தனபால் தலைமை வகித்தாா். மல்லனம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.

அனைத்து கிராம சபைக் கூட்டங்களிலும் புதிய வைகை குடிநீா் திட்டத்துக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், நெகிழி ஒழிப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவா் காளிதாஸ் தலைமை வகித்தாா். ஜம்புதுரைகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் பவுன்தாய் காட்டுராஜா தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT