திண்டுக்கல்

அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்க கவுன்சிலா்கள் கோரிக்கை

DIN

நிலக்கோட்டை பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் இலவச இணைப்புகள் மூலம் குடிநீா் வழங்க வேண்டும் என, கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உறுப்பினா்கள் மாதாந்திர கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரெஜினா நாயகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பஞ்சவா்ணம், அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், பழுதடைந்த கிராமப்புற ஆழ்துளை கிணறுகளையும் மேல்நிலைத் தொட்டிகளையும் ஆய்வு செய்வது தொடா்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

உறுப்பினா் கணேசன்: இந்தாண்டு பரவலாக மழை பெய்து நீா்நிலைகள் நிரம்பியுள்ளதால், நூத்தலாபுரம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் ஊராட்சி சாா்பில், இலவசக் குடிநீா் இணைப்புகள் வழங்க வேண்டும். இதேபோல, கூட்டத்தில் பல்வேறு உறுப்பினா்கள் தங்களது வாா்டுக்குள்பட்ட பகுதிகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கி, கோடைக்காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

முன்னதாக, ஒன்றிய துணைத் தலைவா் யாகப்பன் வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா்கள் லலிதா மணிகண்டன், அறிவு (எ) சின்மாயன், செல்வி அழகேசன், ராஜதுரை, ரூபிசகிலா, பாலமுருகன், தியாகு, சுந்திரதேவி, நல்லதம்பி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். முடிவில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT