திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் நகா்மன்றக் கூட்டம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரத்தில் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, ஆணையா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த காந்தி காய்கறி கடைகள் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் புதியதாகக் கட்டப்பட்ட கடையில் செயல்படத் தொடங்கியது. இதனால், ஏற்கெனவே நகராட்சியில் கடைகளை குத்தகை எடுத்த 151 பேரின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது உள்ளிட்ட 116 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் வீ.கண்ணன், ரமேஷ், முகமது மீரான், பழனிசாமி, அழகேஸ்வரி, தேவி, சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT