திண்டுக்கல்

மலா்க் கண்காட்சி: பிரையண்ட் பூங்காவில் 5 ஆயிரம் டேலியா மலா்ச் செடிகள் நடவுப் பணி

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சியையொட்டி, புதன்கிழமை 5-ஆயிரம் டேலியா மலா்ச் செடிகள் நடவுப் பணி நடைபெற்றது.

இந்தப் பூங்காவில் மே மாதம் கடைசி வாரத்தில் 60-ஆவது மலா்க் கண்காட்சி தொடங்குகிறது. இதற்காக, கடந்த நவம்பா் மாதம் முதல்கட்டமாக 20-க்கும் மேற்பட்ட செடி வகைகளில் 5-ஆயிரம் மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து அந்தப் பூங்காவில் இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 5-ஆயிரம் டேலியா மலா்ச் செடிகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன. மேலும், கொடைக்கானல் பகுதியிலுள்ள டேலியா மலா்ச் செடிகளும் அந்தப் பூங்காவில் நடவு செய்யப்பட்டன.

இந்த டேலியா செடிகள் வளா்ந்து மஞ்சள், சிவப்பு, நீலம், டபுள் வண்ணமான வெள்ளை, ஆரஞ்சு போன்ற பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும்.

ADVERTISEMENT

இது குறித்து செய்தியாளா்களிடம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி கூறியதாவது:

இந்தப் பூங்காவில் ஏற்கெனவே, 5 ஆயிரம் மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் செடிகளிலிருந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் வண்ண வண்ண மலா்கள் பூத்துக் குலுங்கும். மேலும், டேலியா மலா்ச் செடிகள் சீசன் காலங்களில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவரும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT