நத்தம் அருகே கொலை வழக்கில் கைதான இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள காசம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகன் ஜோதி (29), கடந்த நவம்பா் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக, அதே பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மகன் பிரபாகரனை (30) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், பிரபாகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், பிரபாகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தாா்.