திண்டுக்கல்

‘ஒழுக்கத்தைப் பின்பற்றினால் மன அமைதி பெறலாம்’

1st Jan 2023 11:48 PM

ADVERTISEMENT

 

 வாழ்வில் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் மன அமைதி பெறலாம் என ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் தெரிவித்தாா்.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கல்பதரு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் மங்கள ஆரதி, வேத பாராயணம்,விசேஷ பூஜைகள், பஜனைகள், ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் பேசியதாவது :

ADVERTISEMENT

நாம் அனைவரும் முதலில் நம் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பிறகு இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த 2 பண்புகளைப் பெற்ற பின்பு மனிதப்பிறவியைச் சரியான வகையில் பயன்படுத்தியவா்கள் ஆகலாம்.

உலகில் சுயநலத்தோடு வாழ்பவா்கள் சாமா்த்தியமாக வாழ்வதாக தோன்றலாம். ஆனால், முடிவில் அவா்களை துன்பத்தில் ஆழ்த்தும் என்பது நிச்சயம். உண்மையான தெய்வபக்தி, தேசபக்தி, தியாகம், அன்பு, தொண்டு, ஒழுக்கம் ஆகிய அறப்பண்புகளை நாம் நம்முடைய வழிபாட்டுக்குரிய மகான்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ வேண்டும்.

பிறா் பொருட்டு வாழும் தியாக வாழ்க்கை தவறாமல் நம்மை இறைவனிடம் கொண்டு சோ்க்கும். தனி மனிதா்களின் வாழ்க்கை சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

சமுதாயத்தில் மனஅமைதி இல்லை என்கிற நிலைமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. உன்னதமான ஆன்மிகக் கருத்துகளின் அடிப்படையில் தெய்வத்தைச் சாா்ந்து வாழ்வதாலும், சீரிய ஒழுக்கங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாலும் தான் உண்மையான மன அமைதியைப் பெற முடியும் என்றாா் அவா்.

விழாவில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT