ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள், கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
2023-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், திண்டுக்கல் புனித வளானாா் பேராலயம், தூய பவுல் ஆலயம், தூய திருத்துவநாதா் ஆலயம், மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மாரம்பாடி புனித அந்தோணியாா் பேராலயம், செந்துறை புனித சூசையப்பா் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சனிக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
இதேபோல, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில், சின்னாளபட்டி ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.