திண்டுக்கல்

ரேஷன் அரிசி கடத்தல்: மாவு ஆலை உரிமையாளா் கைது

DIN

திண்டுக்கல்லில் 1,050 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா், இதுதொடா்பாக மாவு ஆலை உரிமையாளரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் நாகல்நகா் செளராஷ்டிராபுரம் 2-ஆவது தெருவில், மாவு அரைத்துக் கொடுக்கும் ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் ஆய்வாளா் ஆா். கீதா, உதவி ஆய்வாளா் பி. காா்த்திகேயன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் செளராஷ்டிராபுரம் பகுதியிலுள்ள வீட்டில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், தலா 50 கிலோ கொண்ட 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளா் லெ. ஆனந்தனை (52) போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

வீட்டின் பின்புறமுள்ள ஆலையில் மாவு அரைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்ட வந்த ஆனந்தன், அதற்காக கடத்தல் ரேஷன் அரிசியை கொள்முதல் செய்தாா். அவா் கைது செய்யப்பட்டு, 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT