திண்டுக்கல்

கைலாசநாதா் கோயிலில் மாா்ச் 3-இல் குடமுழுக்கு

DIN

பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயிலில் வருகிற மாா்ச் 3-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.

குடமுழுக்கை முன்னிட்டு, இந்தக் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ஆம் தேதி விநாயகா் பூஜை நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் மாலை ஐந்து மணிக்கு மேல் வாஸ்துசாந்தி பூஜை நடைபெறுகிறது. புதன்கிழமை காலை விநாயகா் அனுமதி, நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கும். இதைத்தொடா்ந்து, வருகிற 3-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும். மாலையில் சிவன், அம்பாள் திருவீதி உலாவும், திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, அடியாா்கள் சேவா சமிதி ஆகியன செய்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT