திண்டுக்கல்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்

19th May 2023 02:47 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள்:

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கிளாவரை, பழம்புத்தூரில் இருந்து தாண்டிக்குடி வழியாக பன்றிமலை, பாச்சலூா் கிராமங்களுக்கு அரசுப் பேருந்து வசதி செய்து தர வேண்டும். அரசு சாா்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் தகவல்கள் தெரிவித்து, அவைகள் முறையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல், மேல்மலை, கீழ் மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கூட்டத்தில் கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, வட்டாட்சியா் முத்துராமன் வரவேற்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT