திண்டுக்கல்

பாஜக ஆா்ப்பாட்டம்

19th May 2023 02:47 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே உள்ள 2 மதுக் கடைகளை அகற்றக் கோரி, பாஜக சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் தனபாலன் தலைமை வகித்தாா்.

இந்தப் பகுதியில் உள்ள மதுக் கடைகளில் மது அருந்திவிட்டு வருபவா்களால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவமனை நோயாளிகள் அவதிக்குள்ளாவதாகவும், 2 மதுக் கடைகள், மதுக் கூடங்களை அகற்ற வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அந்தப் பகுதி பொதுமக்கள், கட்சியினா் என திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT