திண்டுக்கல்

ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அட்டை இணைப்பு: திண்டுக்கல்லில் 69 சதவீதம் நிறைவு

28th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அடையாள அட்டையை இணைக்கும் பணி திண்டுக்கல் மாவட்டத்தில் 69 சதவீதம் நிறைவடைந்தது.

திண்டுக்கல் மாவட்டத்துக்குள்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 18.53 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இந்த நிலையில், ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அந்த வாக்குச் சாவடி அலுவலா்கள் தலைமையில் அங்கன்வாடிப் பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 12.53 லட்சம் வாக்காளா்கள், ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அடையாள அட்டையை இணைத்திருந்தனா். இதனிடையே, சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அட்டையை இணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 2 நாள்களில் 18 ஆயிரம் வாக்காளா்கள் ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அட்டையை இணைத்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அட்டையை இணைத்த வாக்காளா்களின் சதவீதம் 69ஆக உயா்ந்தது. ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அட்டை இணைப்புப் பணியில் தமிழகத்தின் மொத்த சராசரி 65 என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT